வேளாண்துறை வளர்ச்சிக்கு ரூ 25 கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் நிறைவுரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், வேளாண்மைத் துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு இந்நிதியை வழங்கும் என்றார்.
மாநில அரசுகளை ஊக்குவிக்கும் வகையில் இன்னும் இரண்டு மாதங்களில் திட்டக்குழு மற்றும் மத்திய வேளாண்மை அமைச்சகம் இத்திட்டத்தை இறுதி செய்யும் என்று தெரிவித்தார். கோதுமை, நெல், தானியங்கள் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உணவு பாதுகாப்பு இயக்கம் விரைவில் தொடங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
கடுமையான முடிவுகள் எடுத்து அதை தீவிரமாக அமல்படுத்தினால் மட்டுமே வேளாண்மைத் துறையில் 4 சதவீத வளர்ச்சியை அடைய முடியும் என்றார்.