இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் கருணாநிதி குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் வருகிற ஜூலை 25 ஆம் தேதியுடன் முடிவைகிறது.இந்நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சர் இரண்டு நாள் பயணமாக இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு குறித்து அலோசனை நடத்தினார்.
தமிழ் நாடு அரசு இல்லத்தில் முதலமைச்சர் கருணாநிதியை தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய வேளாண்மைத் துறை அமைச்சருமான சரத்பவார் சந்தித்து பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் காரத்தும் கருணாநிதியை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து இன்று மாலை அவர், பிரதமர் மன்மோகன் சிங்குடன், குடியரசுத் தலைவர் வேட்பாளர் மற்றும் நதி நீர் பங்கீட்டு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். நாளை நடைபெற உள்ள தேசிய மேம்பாட்டு பேரவை கலந்தாய்வு கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.