சீக்கிய மதத்தின் குருவான கோவிந்த சிங் போல உடை அணிந்து விளம்பரம் தந்ததற்காக தான் மன்னிப்புக் கோருவதாக தேரா சச்சா சௌடா மதப்பிரிவின் தலைவர் பாபா குர்மித் ராம் ரஹீம் சிங் கூறியுள்ளார்!
ஹரியானா மாநிலம் சிர்சாவில் உள்ள தேரா சச்சா சௌடா தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரு கோபிந் சிங்கிடம் தான் மன்னிப்புக் கோருவதாக குர்மித் ராம் சிங் கூறியுள்ளதாகவும், சீக்கிய மதத்தின் தலைமை அமைப்பான அகால் தத்திடம் அவர் மன்னிப்புக் கோரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
குரு கோபிந் சிங்கை போல தன்னைக் காட்டிக் கொள்வதற்கோ, அல்லது சீக்கிய சகோதரர்களின் மனதை புன்படுத்துவதற்கோ தான் அவ்வாறு உடை அணியவில்லை என்று குர்மித் ராம் சிங் கூறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரு கோபிந் சிங் போல உடை அணிந்ததற்கு 27ஆம் தேதிக்குள் குர்மித் ராம் சிங் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அகால் தத் கெடு விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.