பஞ்சாப், ஹரியான மாநிலங்களில் சீக்கியர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிக அளவில் பாதுகாப்பு படைகளை அனுப்பி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் தேரா சச்சா சவுதா அமைப்பினருக்கும், சீக்கியர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழ் நிலை நிலவுகிறது.
மேலும், இந்த கலவரம் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பரவியுள்ளது. பஞ்சாப்பில் அமைதியை நிலை நாட்ட அம்மாநில முதல்வர் இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இந்நிலையில், பஞ்சாப் மற்றும், அரியான மாநிலங்களில் கலவரத்தை கட்டுப்படுத்த 5 ஆயிரம் பேர் அடங்கிய அதிரடி படை, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மத்திய ரிசர்வு படை வீரர்கள் அனுப்பப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.