இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இடது சாரிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன!
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைவதையொட்டி, புதிய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகின்றன.
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், செயற்குழுத் தலைவருமான சீத்தாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரசும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் ஒன்று சேர்ந்து பிரணாப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தினால், நாங்கள் அவரை ஆதரிப்போம்.
ஆனால், குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரை நிறுத்துவது என்பதை காங்கிரசும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.