மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன் 15ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 29ஆம் தேதி துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூன் 5 கடைசி நாள். ஜுன் 15ல் தேர்தல் நடக்கும்.
காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர். வாக்கு எண்ணிக்கை அன்று மாலையே தொடங்கும்.
மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 18 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தற்போது மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருக்கும் திமுக உறுப்பினர் கே.பி.கே. குமரன் அதிமுக உறுப்பினர்கள் ஆர். காமராஜ் எ. கோகுல இந்திரா எ.எ. சந்திரன் பி.ஜி. நாராயணன் காங்கிர உறுப்பினர் பி.எ. ஞானதேசிகன் ஆகியோர் பதவிக் காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிகிறது.
இவர்களுக்கு பதிலாக புதிய 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.