ஹைட்ரஜன் பெராக்ஸைடு - வீட்டையும் சுத்தம் செய்யலாம்!
, வெள்ளி, 21 பிப்ரவரி 2014 (15:59 IST)
பொதுவாக கை, கால்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால்தான் ஹைட்ரஜன் பெராக்ஸைடு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு முதலுதவிக்கு பயன்படும் ஹைட்ரஜன் பெராக்ஸைடை கொண்டு வீட்டில் உள்ள பொருட்களையும் சுத்தம் செய்யலாம்.
உதாரணமாக, மரத்தால் செய்யப்பட்ட காய்கறி நறுக்கும் பலகையில் உள்ள கறைகளைப் போக்குவதற்கு, விலை மலிவாக கிடைக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடைப் பயன்படுத்தலாம்.அதே சமயம், காய்கறிகளின் மேல்புறத்தில் உள்ள பாக்டீரியாக்களைப் போக்குவதற்கு, சிறிது ஹைட்ரஜன் பெராக்ஸைடு தெளித்தால், கிருமிகள் அழிந்துவிடும். சரி, இப்போது இத்தகைய சிறப்புகளைக் கொண்ட ஹைட்ரஜன் பெராக்ஸைடு மூலம் என்னென்ன பொருட்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.ஹைட்ரஜன் பெராக்ஸைடை நீரில் ஊற்றி, பின் அதில் கறையுள்ள துணிகளை ஊற வைத்து துவைத்தால் துணிகளில் படிந்திருக்கும் இரத்தம், ரெட் ஒயின், வியர்வை அல்லது எண்ணெய் கறைகளை எளிதில் போக்கலாம்.வீட்டில் உள்ள வெள்ளைத் தரைகளில் இருக்கும் கறைகளை அகற்றுவதற்கு, ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் வினிகரை கலந்து, தரைகளை துடைக்க வேண்டும்.
சமையலறையில் உள்ள ஏராளமான பொருட்களை சுத்தம் செய்வதற்கு ஹைட்ரஜன் பெராக்ஸைடு உதவியாக உள்ளது. அதிலும் காய்கறி நறுக்கும் பலகை, ஸ்பாஞ்ச் போன்றவற்றில் உள்ள கிருமிகளைப் போக்குவதற்கு, ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஊற்றி கழுவினால், சுத்தமாக இருக்கும்.