Newsworld News Letusknow 1402 01 1140201018_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாட்டு மூத்திரத்தைக் குடிக்கும் மனிதர்கள் - பக்தியின் விபரீதம்!

Advertiesment
அறிவோம்
, சனி, 1 பிப்ரவரி 2014 (13:21 IST)
உணவின் எச்சமே சிறுநீரும், மலமும். இது மாட்டுக்கும் பொருந்தும். படித்தவர்கள் செய்யும் காரியமா இது?
FILE

நம் இரத்ததில் உள்ள வியாதி கிருமிகள் வெளிவரும் வழிதான் சிறுநீர். இதை எடுத்துச் சொல்ல வேண்டிய படித்த தலைமுறை பக்தியின் பெயரால் மாட்டு மூத்திரத்தைக் குடிப்பதை என்னவென்று சொல்லுவது?

இதுபோல தான் ஆந்திராவில் பசுக்களின் வாலைத் தூக்கி, அது சாணம் போடும் ஆசனவாயை தொட்டு வணங்கும் பழக்கம் உள்ளது.

இது போன்ற முட்டாள்தனமான காரியங்கள் ஏன் நடக்கின்றது. பக்தியின் காரணமாகத் தான். மாட்டை இந்த நாட்டின் புனிதப் பொருளாக மாற்றியதன் விளைவாகத் தான். புனிதப் படுத்தப்பட்ட எதுவும் அறிவு கொண்டு சிந்திக்க அனுமதிக்காத மூளைக்கு இடப்பட்ட விலங்கு.

எது ஒன்றையையும், எந்த மதம் சார்ந்த செயல்பாடுகளையும், எப்படிப்பட்ட நம்பிக்கைகளையும் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளுக்கு உட்படாதவரை மாடும், மனிதனும் ஒன்றுதான்.

பகுத்தறிவை விடுங்கள்! இவர்கள் அறிவை எங்கு அடகு வைத்தார்கள் என்று தெரியவில்லை. பக்தி வந்தால் புத்தி போகும் என்பது தமிழ்நாட்டு முதுமொழி.

"மனிதனுக்கு உயர்வு அவனின் ஆறாவது அறிவு". அறிவு கொண்டு சிந்திப்பீர்; ஆரோக்கிய வாழ்வு வாழ்வீர்!

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil