அரசியலில் பெண்கள்: இந்தியாவிற்கு 73 வது இடம்
, திங்கள், 17 மார்ச் 2014 (15:56 IST)
உலக அளவில் அரசியலில் பெண்கள் பங்கேற்பில் இந்தியா கான்கோ மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளை விடவும் மிகவும் பின்தங்கி 73 வது இடத்தை பிடித்துள்ளது.
உலக அளவில் பெண்களின் அரசியல் பங்கேற்பை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தியவிற்கு 73 வது இடம் கிடைத்துள்ளது. ஐ.நா பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த ஆய்வு முடிவில், 2014 ஆம் ஆண்டு அரசியலில் பெண்களின் பங்கு குறித்த புள்ளி விவர அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பது மற்றும் மத்திய அமைச்சர்களாக பதவி வகிப்பது போன்றவற்றில் இந்தியாவில் அரசியலில் பெண்களின் பங்கு மொத்தமாக 9.9 சதவீதம் மட்டுமே உள்ளது.