Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு மாத குழந்தையின் மூக்கை கடித்து துப்பிய தந்தை

Advertiesment
ஒரு மாத குழந்தையின் மூக்கை கடித்து துப்பிய தந்தை
, திங்கள், 17 மார்ச் 2014 (15:12 IST)
அமெரிக்காவை சேர்ந்த 18 வயது நபர் ஒருவர் அவரது ஒரு மாத குழந்தை தொடர்ந்து அழுதுக்கொண்டு இருந்ததால், அதன் முக்கை கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
FILE

வட கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஜொஷுவா கூப்பர். இவருக்கு வயது 18. இவருக்கு ஒரு மாத ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று குழந்தையின் தாய் வெளியே சென்றுவிட, ஜொஷுவா குழந்தையை கவனித்துக்கொள்ள வீட்டில் இருந்தார்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த அக்குழந்தை, திடீரென அழ துவங்கியது. குழந்தையை சமாதானம் செய்ய கூப்பர் முயன்றபோதும் அதற்கு எந்த பயனுமில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கூப்பர் குழந்தையின் மூக்கை கடித்து துப்பினார்.

வலியால் துடித்த குழந்தையை கூப்பர் கீழே வீசியதாகவும் தெரிகிறது. வீட்டிற்குள் நுழைந்ததும் குழந்தை ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்ட தாய் உடனடியாக அவர் போலீசில் புகார் அளித்தார்.
webdunia
FILE

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கூப்பரை கைது செய்துள்ளனர்.

மூக்கு எலும்பு உடைந்து, மூளையில் ரத்தப்போக்கும் ஏற்பட்ட குழந்தைக்கு ஒக்லாந்து குழந்தைகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil