Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொலைக்காட்சியில் பாடுவதற்காக பெற்ற குழந்தையை விற்ற தந்தை

தொலைக்காட்சியில் பாடுவதற்காக பெற்ற குழந்தையை விற்ற தந்தை
, புதன், 19 பிப்ரவரி 2014 (14:03 IST)
தொலைக்காட்சியில் பாடுவதற்காகப் பெற்ற குழந்தையை விற்ற தந்தையை சீன காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
FILE

தொலைக்காட்சியில் பாடும் நிகழ்ச்சிகள் நம் நாட்டில் மட்டுமில்லை, உலக நாடுகள் அனைத்திலும் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால்ல் சீனாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடகராக ஆசைப்பட்ட ஒருவர் அதன் செலவுக்காக தனது 4 மாத குழந்தையை விற்றுள்ளார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சீனாவில் உள்ள குய்சோவ் மாகாணத்தை சேர்ந்தவர் சொவ். பாடுவதில் அதிக ஆர்வமுடையவராக இருந்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி 4 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், அவரது மனைவி தனது குழந்தையை காணவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து தருமாறும் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார்.

புகார் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரது கணவர் சொவ் பாடகராகும் ஆசையில் குழந்தையை ஒரு லட்சத்திற்கு விற்றதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் சொவ்வை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil