புலி கூண்டிற்குள் நுழைந்து தற்கொலைக்கு முயற்சி செய்த இளைஞர்
, புதன், 19 பிப்ரவரி 2014 (12:10 IST)
சீனாவில் புலியின் கூண்டிற்குள் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென் மேற்கு சீனாவில் உள்ள செங்க்டு மிருக காட்சியகத்திற்குச் சென்ற யாங் ஜிங்காய் என்ற 27 வயது இளைஞர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அங்கிருந்த புலியின் கூண்டிற்குள் குதித்துள்ளார்.இதனைப் பார்த்து அதிர்ச்சியுற்ற மற்ற பார்வையாளர்கள் அவரைக் காப்பாற்றும்படி சத்தம் போட்டுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மிருகக்காட்சி சாலை பாதுகாவலர்கள் இளைஞரை புலியிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.ஆனால் அதற்குள் கூண்டுக்குள் குதித்துவிட்ட யாங், புலியை ஆத்திரமூட்டும் வகையில் அதன் தாடையை பிடித்து இழுத்து சத்தம் போட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த புலி அவரை தாக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும் போராட்டத்திற்கு பின்னர் மிருக காட்சி சாலைப் பாதுகாவலர்கள் யாங்கை மீட்டனர். பிறகு அவரை மனநல மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மன அழுத்ததால் பாதிக்கப்பட்டு இத்தகைய தற்கொலை முடிவை இவர் எடுத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.