பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு
, புதன், 19 பிப்ரவரி 2014 (11:37 IST)
விண்வெளியில் இருக்கும் ராட்ஷச விண்கற்கள் பூமியை நோக்கி வேகமாக வந்துக்கொண்டிருப்பதாக பல செய்திகள் வெளிவரும் வேளையில், இத்தகைய ராட்ஷச விண்கற்களில் ஒன்று பூமிக்கு மிக அருகே வந்து சென்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
விண்வெளியில் பல்வேறு அளவுகளை கொண்ட ஏராளமான விண்கற்கள் உள்ளன. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன.
இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில விண்கற்கள் பூமியில் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி ரஷ்யாவில் விழுந்தது. 20 மீட்டர் சுற்றளவு கொண்ட அந்த விண்கல் வெடித்து சிதறியதில் 1200 பேர் காயம் அடைந்தனர்.