Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வன்னி : சிங்களவர் மத்தியில் தமிழர்களை குடியமர்த்த இலங்கை அரசு திட்டம்

Advertiesment
வன்னி : சிங்களவர் மத்தியில் தமிழர்களை குடியமர்த்த இலங்கை அரசு திட்டம்
கொழும்பு , திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (13:02 IST)
வன்னி தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்க்குடியமர்த்தப்படுவது காலவரையறை ஏதுமின்றி தள்ளிப்போடப்படலாம் என இலங்கை அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் படையினரையும், சிங்கள மக்களையும் குடியேற்றிய பின்னர் அவர்களுக்கு மத்தியில் தமிழர்களை குடியமர்த்த அரச இரகசிய திட்டம் ஒன்றை கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான சில தகவல்களை 'ராவய' சிங்கள வார ஏடு வெளியிட்டுள்ளது.

வன்னியில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள படை முகாம்கள் மற்றும் சிங்கள குடியேற்றங்களுடனேயே தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவதற்கான திட்டம் ஒன்றை அரசு கொண்டிருக்கின்றது என 'ராவய' தெரிவிக்கிறது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மன்னாருக்குக் கீழேயும் வவுனியாவுக்கு மேலேயும் இந்த குடியேற்ற மற்றும் மீள்குடியமர்வுத் திட்டங்களை அரசு செயற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளது.அந்தப் பகுதிகளில் தற்போது மக்கள் எவரும் இல்லை.அவர்கள் அனைவரும் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய அனைத்துத் தமிழ்க் கிராமங்களையும் இல்லாது அழிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக 'ராவய' மேலும் கூறுகிறது.

அரசின் இந்தப் புதிய திட்டத்தை அடுத்து, அந்தப் பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் குடியிருக்கும் நிலைமை ஏற்பட்டாலும்கூட தமிழ் மக்கள் உடனடியாக அந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் எனவும் அதில் கூறபட்டுள்ளதி.

தமிழர்களுடன் அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு எதிரான, அரசியல் அங்கம் வகிப்பவர்களே இந்தத் திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளார்கள் என்றும், அதேநேரம் அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள் என்றும் 'ராவய' செய்தி மேலும் கூறுகின்றது.

இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்று பல உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.180 நாட்களுக்குள் அவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று உறுதியளித்த அரசு இன்னும் அதற்கான பணிகளை மேற்கொள்ளாது தாமதப்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil