Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவை பல நாடுகளாக துண்டாட சீனாவுக்கு யோசனை

Advertiesment
இந்தியாவை பல நாடுகளாக துண்டாட சீனாவுக்கு யோசனை
பீஜிங் , செவ்வாய், 11 ஆகஸ்ட் 2009 (19:04 IST)
சீனா சிறிது முயற்சி மேற்கொண்டால்,' கூட்டாட்சி நாடு' என்று பெருமை பேசி வரும் இந்தியாவை 20 அல்லது 30 நாடுகளாக துண்டாட செய்துவிடலாம் என சீனாவுக்கு அந்நாட்டு பாதுகாப்பு நிபுணர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னை குறித்த 13 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை நடைபெற்ற அதே தினத்திலேயே,சீனாவுக்கு சர்வதேச மற்றும் இராணுவ விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்கி வரும் சீன சர்வதேச யுத்த தந்திர ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைய தளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

ஷான் லீ என்பவர் எழுதிய அந்த கட்டுரையில்,வரலாறு கூறுவது போன்று இந்தியாவை ஒரே நாடு என்று கூறமுடியாது என்றும், இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு இந்து மதத்தையே பிரதானமாக நம்பியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவை சாதியை அடிப்படையாக கொண்ட" இந்து மத நாடு " என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ள லீ, சீனாவின் சொந்த நலன் மற்றும் ஒட்டுமொத்த ஆசியாவின் வளர்ச்சி ஆகியவற்றுக்காக இந்தியாவை 20 அல்லது 30 நாடுகளாக துண்டாட செய்யலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சாதி பிளவுகளை மனதில் கொண்டு அஸ்ஸாமியர்கள், தமிழர்கள் மற்றும் காஷ்மீரிகள் போன்ற வேற்று தேச அடையாளங்கள் கொண்ட சக்திகளுக்கு ஆதரவளித்து, அவர்களுடன் சேர்ந்து இந்தியாவை எளிதாக பல நாடுகளாக சிதறுண்டுப் போகச் செய்துவிடலாம் என்றும், குறிப்பாக சுதந்திர அஸ்ஸாம் கோரி வரும் உல்ஃபா அமைப்புக்கு சீனா ஆதரவளிக்கலாம் என்றும் அந்த கட்டுரையில் சீனாவுக்கு யோசனை கூறியுள்ளார் லீ.

மேலும் இந்தியாவை பல நாடுகளாக உடைப்பதற்கு பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பூடான் போன்ற நட்பு நாடுகளின் உதவியையும் சீனா கோரலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பா போன்று இந்தியா பல நாடுகளாக உடைந்தால், அதன் மூலம் இந்தியாவில் காணப்படும் சாதி அமைப்பு ஒழிந்து, பிராந்தியங்கள் வளர்ச்சியை நோக்கி செல்லும் என்றும், அதுமட்டுமல்லாது தெற்காசியாவில் சமூக சீர்திருத்தத்தையும் அடைய முடியும் என்றும் அந்த கட்டுரையில் லீ மேலும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil