இலங்கையின் வன்னி பகுதியில் இடம்பெயர்ந்த தமிழர்களின் மீது சிறிலங்க படையினர் இரவு-பகலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலுக்கு இதுவரை 34 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் (சனி) பின் இரவில் தொடங்கிய தொடர் எறிகணை, கொத்துக்குண்டு, வெடிகணை, பீரங்கி மற்றும் கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கிச்சூடு தாக்குதல் இன்று (திங்கள்) அதிகாலை வரை தொடர்ந்து நடத்தப்பட்டதாக புலிகள் ஆதரவு இணையதளமான புதினம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை குறி வைத்து சிறிலங்கா படையினர் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இத்தாக்குதல்களில் இன்று காலை வரை 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன்; 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்டவர்களில் நெடுங்கேணி, பழம்பாசியைச் சேர்ந்த கிராம சேவையாளரான நல்லைநாதன் ரேணுகாந்தன் என்பவரும் அடங்குவார் என புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.