ஆஃப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் எல்லைப் பகுதி உள்ளதென அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல் முறையாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா, பாகிஸ்தான் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பழங்குடியினர் பகுதிதான் (Federally Administered Tribal Areas - FATa) ஆஃப்கான் பயங்கரவாதிகளின் புகலிடம் உள்ளதென கூறியுள்ளார்.
ஆஃப்கான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பாக தஞ்சமடைந்து செயல்பட்டுவரும் பயங்கரவாதிகளால் ஆஃப்கானிற்கு மட்டுமின்றி பாகிஸ்தானிற்கும் அபாயம் உள்ளது என்றும், இதனை முழுமையாக ஒழிக்க அவர்கள் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ள பகுதிகளின் மீது இணைந்து தாக்குதல் நடத்தி அவர்களை ஒழிக்க வேண்டும் என்ற செய்தியை பாகிஸ்தான் அரசிற்கு அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதியான ரிச்சர்ட் ஹோல்புரூக் தெரிவிப்பார் என்று ஒபாமா கூறியுள்ளார்.