பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி ஈராக்கிற்கு தனது முதல் பயணமாக பாக்தாத் வந்து சேர்ந்தார். ஈராக் அதிபர் ஜலால் தாலாபானி அவரை வரவேற்றார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சி ஈராக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
2003ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பை எதிர்த்த பிறகு பிரான்ஸ் அதிபர் முதன்முறையாக ஈராக் வருகை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.