இந்திய தபேலா இசைக் கலைஞர் சகீர் உசேனுக்கு, சர்வதேச அளவில் இசைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது (Grammy award) வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்த விருது வழங்கும் விழாவில், குளோபல் டிரம் ப்ராஜக்ட் என்ற ஆல்பத்திற்கு சிறப்பாக இசை அமைத்ததற்காக, சிறந்த சர்வதேச இசை ஆல்பம் பிரிவுக்கான கிராமி விருது சகீர் உசேனுக்கு வழங்கப்பட்டது.
குளோபல் டிரம் ப்ராஜக்ட் (Global Drum Project) இசை ஆல்பத்திற்கு, மிக்கி ஹர்ட், நைஜீரியாவைச் சேர்ந்த சிகிரு அடிபொஜு, போர்டோரிகாவைச் சேர்ந்த ஜாஸ் இசைக் கலைஞர் கியோவன்னி ஹிடல்கோ ஆகியோருடன் இணைந்து தபேலா இசைக்கலைஞர் சகீர் உசேன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.