அஜ்மல் கஸாப்புடன் தொடர்பு: கராச்சியில் 3 பேர் கைது?
Publish Date: Mon, 09 Feb 2009 (12:00 IST)
Updated Date: Mon, 09 Feb 2009 (11:59 IST)
மும்பை மீதான தாக்குதலில் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கஸாப் உடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி 3 பேரை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் கராச்சியில் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கஸாப் உடன் தொடர்பு வைத்திருந்த காரணத்திற்காக கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் இருந்த மூவரையும் உளவுத்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது.அவர்கள் 3 பேரும் விசாரணைக்காக இஸ்லாமாபாத் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும், இதுதொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியிடப்படவில்லை.மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு இந்தியா அளித்துள்ள ஆதாரங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு பற்றிய அறிக்கையை இன்று பாகிஸ்தான் அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அஜ்மல் கஸாப் உடன் தொடர்பு வைத்திருந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Mon, 09 Feb 2009 (12:00 IST)
Updated Date: Mon, 09 Feb 2009 (11:59 IST)