பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் உள்ள சோதனை சாவடி மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வசிரிஸ்தானில் உள்ள மிரன்ஷா நகருக்கு கிழக்கே 50 கி.மீ தொலைவில் பரன்-புல் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த சோதனைச் சாவடி மீது இன்று அதிகாலை தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த 17 பேரில், 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களுக்கு பான்னு பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.