Publish Date: Sat, 07 Feb 2009 (11:01 IST)
Updated Date: Sat, 07 Feb 2009 (11:01 IST)
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 7 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாப் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள மியான்வாலி நகர சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர் மாலிக் ஹய்யத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்புக்கு முன்பாக துப்பாக்கிச்சூடும் நடந்ததாக சோதனைச் சாவடிக்கு அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கான காரணம் பற்றித் தெரியவில்லை என்றாலும், இது நிச்சயம் பயங்கரவாதச் செயல் என்றும், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் மாலிக் ஹய்யத் கூறியுள்ளார்.