Newsworld News International 0902 07 1090207009_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறிலங்கப் படையினர் பீரங்கித் தாக்குதல்: வன்னியில் 48 தமிழர்கள் பலி

Advertiesment
சிறிலங்கப் படை பீரங்கித் தாக்குதல் வன்னி தமிழர்கள் வவுனியா இலங்கை
இலங்கையின் வன்னி பகுதியில் சிறிலங்கா படையினர் நேற்று பரவலாக நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் 48 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். 174 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவின் மாத்தளான் பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 13 பேர் காயமடைந்தனர்.

இதேபோல் தேவிபுரம் பகுதியில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என புதினம் செய்தி தெரிவிக்கிறது.

தேவிபுரம் ஆற்றங்கரைப் பகுதியில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்களின் குடிசைகள் மீது நேற்று முழுவதும் எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை படையினர் நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

சுதந்திரபுரம் வீட்டுத்திட்டம் மீது நேற்று பிற்பகல் 4.35 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதலில் 6 தமிழர்களை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மூங்கிலாறு பகுதி மீது நேற்று முழுவதும் சிறிலங்கப் படையினர் நடத்திய தாக்குதலில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் முல்லைத்தீவின் உடையார்கட்டு பகுதியில் 8 தமிழர்களும், வள்ளிபுனம் பகுதியில் 14 தமிழர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil