Publish Date: Fri, 06 Feb 2009 (16:51 IST)
Updated Date: Fri, 06 Feb 2009 (16:50 IST)
பாகிஸ்தானின் தேரா காஷி கான் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் தேரா காஷி கான் பகுதியில் உள்ள மசூதி அருகே நேற்றிரவு ஷியா முஸ்லிம்கள் ஊர்வலம் சென்ற போது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 குழந்தைகள் உட்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த 70க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.