Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவிற்கு சவாலாக விளங்கும் அல்-கய்டா

Advertiesment
அமெரிக்காவிற்கு சவாலாக விளங்கும் அல்-கய்டா
, வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (14:07 IST)
ஏமனில் தஞ்சம் புகுந்துள்ள அல்-கய்டா பயங்கரவாதிகள், அங்கிருந்து கொண்டு அமெரிக்காவிற்கு சவாலாக விளங்கி வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ராபர்ட் உட் கூறியிருக்கிறார்.

அல்-கய்டாவைப் பொருத்தவரை அதிகரித்து வரும் மிகப்பெரிய சவாலாகத் திகழ்கிறது என்றும் அவர் கூறினார்.

ஏமனில் அல்-கய்டாவினர் இருப்பதற்கான குறிப்பிட்ட எந்தவொரு தகவலும் இல்லையென்று குறிப்பிட்ட ராபர்ட், அனைத்து உலக நாடுகளுடனும் இணைந்து அல்-கய்டா அமைப்பின் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா செயலாற்றி வருவதாக கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

அல்-கய்டா அமைப்பை முற்றிலுமாக ஒழிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்றும், அமெரிக்காவைப் பொருத்தவரை அதுவொரு மிகப்பெரிய சவால் என்றும் அவர் கூறினார்.

இந்த சவாலை முறியடிக்க அமெரிக்கா ஏதாவது செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குறிப்பிட்டதையும் ராபர்ட் சுட்டிக்காட்டினார்.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அல்-கய்டாவினரிடன் தாக்குதல்கள் நீடித்து வருவது கவலையளிக்கக் கூடியது என்றும் அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil