Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளை பாஸ்பரஸ் குண்டுவீச்சு: வன்னியில் சிறிலங்கப் படையினர் அட்டூழியம்

Advertiesment
வெள்ளை பாஸ்பரஸ் குண்டுவீச்சு: வன்னியில் சிறிலங்கப் படையினர் அட்டூழியம்
கொழும்பு , புதன், 4 பிப்ரவரி 2009 (10:28 IST)
இலங்கையில் உள்ள வன்னி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அதிகளவில் வாழும் இடங்கள் மீது கடந்த சில நாட்களாக வெள்ளை பாஸ்பரஸ் (white phosphorus shells) சேர்க்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து கொண்ட எறிகணைகளை பீரங்கிகள் மூலம் சிறிலங்கா படையினர் வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக புதினம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வன்னியில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் புதிய ரக எரிகுண்டுகளை பீரங்கிகள் மூலம் வீசித் தாக்குகின்றனர்.

இந்த எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் இடங்களில் மனித உடல்களும், கட்டிடங்களும், மரங்களும் கூட தீப்பற்றி எரிவதுடன் கடுமையான வெப்பமும், சேதங்களும் ஏற்படுகின்றது.

சிறிலங்கா படையினர் தாக்குதல் நடத்திய இடங்களை ஆய்வு செய்ததில், அவர்கள் வெள்ளை பாஸ்பரஸ் சேர்க்கப்பட்ட எரிகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக வன்னியில் இருந்து செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இந்த வகை எறிகணைகள் பயன்படுத்தக் கூடாது என்று 1980-களில் உருவாக்கப்பட்ட ஜெனீவா சட்ட விதிகளிலும் (Under the Geneva Treaty of 1980), அனைத்துலக விதிகளின் அடிப்படையிலும் தடை இருந்தும் அதனை சிறிலங்கப் படையினர் மீறி உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil