Newsworld News International 0902 03 1090203080_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாகாணத் தேர்தல்: ஈராக் அதிபர், பிரதமருக்கு ஒபாமா பாராட்டு

Advertiesment
தேர்தல் ஈராக் அதிபர் பராக் ஒபாமா ஜலால் தலாபானி நூரி அல் மாலிக்கி
வாஷிங்டன் , செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (17:26 IST)
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஈராக் அதிபர் ஜலால் தலாபானி, அந்நாட்டு பிரதமர் நூரி அல் மாலிக்கி ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்திருப்பதற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

போர் காரணமாக பாதிப்புக்குள்ளாகி இருந்த ஈராக்கில் மாகாணத் தேர்தல்கள் கடந்த ஞாயிறன்று அமைதியான முறையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இதையடுத்து ஈராக் அதிபரையும், பிரதமரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா, இந்தத் தேர்தலின் போது சிறிய அளவில் வன்முறைகள் நிகழ்ந்திருந்தாலும், ஈராக்கின் எதிர்கால நலனுக்கு இந்தத் தேர்தல் வலுசேர்க்கும் என்று கூறிப் பாராட்டியுள்ளார்.

ஈராக்கில் இருந்து ராணுவப் படைகளை விலக்கிக் கொள்வதாக தமது நிர்வாகம் எடுத்துள்ள முடிவின்படி அடுத்த 16 மாத காலத்திற்குள் படைகள் திரும்பப் பெறப்படும் என்றார்.

ஒபாமா தெரிவித்த கருத்துகளை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் உறுதிப்படுத்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil