Publish Date: Tue, 03 Feb 2009 (13:17 IST)
Updated Date: Tue, 03 Feb 2009 (13:17 IST)
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் 35 இஸ்லாமியத் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்வாட் பள்ளத்தாக்கின் கவாஸா கேலா பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 35 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர், பீரங்கள் உதவியுடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதி அந்நாட்டின் குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்த சிலர் தீவிரவாத முகாம்களைத் துவக்கி தாலிபான் இயக்கத்தின் வழிமுறைகளை பின்பற்றத் துவங்கியது முதல் அந்நாட்டு ராணுவம் அவர்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.