Publish Date: Tue, 03 Feb 2009 (11:07 IST)
Updated Date: Tue, 03 Feb 2009 (11:07 IST)
பெரு நாட்டின் தெற்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 5.8 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளம் தெரிவிக்கிறது.
இந்திய நேரப்படி நேற்றிரவு 11.23 மணியளவில் அந்நாட்டின் சின்சா அல்டா பகுதியில் இருந்து மேற்கே 40 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 25 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிலநடுக்கத்தின் அளவு ரிக்டரில் 6.0 புள்ளிகளாக பதிவானதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்து உடனடித் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.