Newsworld News International 0902 03 1090203009_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ மீது ‘ஷூ’ வீசித் தாக்குதல்

Advertiesment
சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ லண்டன் இங்கிலாந்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்
லண்டன் , செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (11:29 IST)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ மீது இளைஞரஒருவர‘ஷ’ வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டிற்கு 3 நாள் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள சீனப் பிரதமர், தனது பயணத்தின் ஒரு பகுதியாக லண்டனில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச பொருளாதாரம் குறித்து நேற்று உரையாற்றினார்.

அப்போது பல்கலைக்கழகத்தில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞர் "ஜியாபாவோ ஒரு சர்வதிகாரி; அவரை ஏன் பல்கலைக்கழகத்திற்கு அழைத்தீர்கள்" என்று கத்தியதுடன் ஜிபாபாவோவை நோக்கி தனது காலில் இருந்த ‘ஷ’வை வீசினார். ஆனால் ஜியாபாவோ நின்றிருந்த இடத்திற்கு சுமார் ஒரு மீட்டர் முன்பாகவே ‘ஷ’ விழுந்ததால், அவர் மீது படவில்லை.

இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஷூ வீசிய இளைஞரை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவம் காரணமாக ஏற்பட்ட பரபரப்பில் தாம் பேசுவதை ஜியாபாவோ சில நொடிகள் நிறுத்தி விட்டார்.

முன்னதாக கடந்த ஞாயிறன்று லண்டனில் உள்ள சீனத் தூதரகத்திற்கு வென் ஜியாபாவோ வருகை தந்த போது, அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அவரது பாதுகாப்பு வாகனங்களை நெருங்க முயன்ற ஒரு திபெத் ஆதரவுக் குழுவினர் கைது செய்யப்பட்ட நிலையில், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் மீது ‘ஷ’ வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரில் ஈராக்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது பத்திரிகையாளர் ஒருவர் ஷூ வீசித் தாக்குதல் நடத்திய பரபரப்பு முற்றிலுமாக அடங்குவதற்கு முன்பாகவே, சீனப் பிரதமர் மீது அதேபோல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil