Publish Date: Mon, 02 Feb 2009 (10:19 IST)
Updated Date: Mon, 02 Feb 2009 (10:15 IST)
ரஷ்யாவின் கோமி பகுதியில் உள்ள முதியோர் காப்பக விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோமி குடியரசுப் பகுதியில் உள்ள பொடெல்ஸ்க் கிராமத்தில் செயல்படும் முதியோர் காப்பக விடுதியில் நேற்றிரவு தீப்பிடித்தது. இதன் காரணமாக அங்கு தூங்கிக் கொண்டிருந்த முதியவர்கள் பீதியில் அலறியடித்துக் கொண்டு விடுதியை விட்டு வெளியேறினர். எனினும், தீயில் சிக்கி 23 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விடுதியில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 16 மணி நேரம் போராடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.