Publish Date: Sat, 31 Jan 2009 (17:51 IST)
Updated Date: Sat, 31 Jan 2009 (17:50 IST)
தமிழீழ விடுதலைப் புலிகள் புதிதாக நிறுவியுள்ள சர்வதேச உறவுகள் துறையின் பொறுப்பாளராக அவ்வியக்கத்தின் மூத்த பிரதிநிதி செல்வராசா பத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று புலிகள் ஆதரவு இணையத்தளமான தமிழ்நெட் தெரிவிக்கிறது.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகள், முக்கியத் தருணங்களில் சர்வதேசச் சமூகத்துடன் மேற்கொள்ளப்படும் தொடர்புகள் ஆகியவற்றில் இனி தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பில் செல்வராசா பத்மநாதன் பங்கேற்பார் என்று பல்வேறு சர்வதேச அமைப்புகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச உறவுகள் துறை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தமிழ்நெட் இணையத்தளம் தெரிவிக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் கட்டளைக்கிணங்க பத்மநாதன் செயல்படுவார் என்று அந்தக் கடிதம் கூறுகிறது.
இந்தத் தகவலை உறுதி செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனைத் தொடர்பு கொண்டபோது, பத்மநாதன் ஏற்கெனவே சர்வதேச நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளத் துவங்கிவிட்டார் என்று தெரிவித்தார் என்று தமிழ்நெட் கூறுகிறது.
Webdunia
Publish Date: Sat, 31 Jan 2009 (17:51 IST)
Updated Date: Sat, 31 Jan 2009 (17:50 IST)