Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈராக் மாகாணத் தேர்தல்: வாக்குப்பதிவு துவங்கியது

Advertiesment
ஈராக் மாகாணத் தேர்தல்: வாக்குப்பதிவு துவங்கியது
, சனி, 31 ஜனவரி 2009 (10:08 IST)
ஈராக்கில் உள்ள மாகாணங்களில் 440 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் துவங்கியுள்ளது.

இதையொட்டி நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கின் குர்திஷ் மாகாணத்தைத் தவிர அந்நாட்டில் மீதமுள்ள மாகாணங்களுக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இதில் 440 இடங்களுக்கு 14 ஆயிரம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி இன்னும் ஓரிரு நாளில் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil