Publish Date: Fri, 30 Jan 2009 (12:02 IST)
Updated Date: Fri, 30 Jan 2009 (12:02 IST)
மும்பை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் பாகிஸ்தான் மண்ணில் ருந்து திட்டமிடப்படவில்லை என இங்கிலாந்துக்கான பாகிஸ்தான் தூதர் வஹீத் ஷாசுல் ஹசன் கூறியுள்ளார்.
லண்டனில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இதுவரை நடத்திய விசாரணையில் மும்பை மீதான தாக்குதல் பாகிஸ்தானில் திட்டமிடப்படவில்லை; வேறு ஏதோ ஒரு பகுதியில்தான் அது திட்டமிடப்பட்டுள்ளது; அது இங்கிலாந்தும் அல்ல என்று கூறினார்.
மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நடத்திய புலனாய்வில் கிடைத்த தகவல்களை இந்தியா உட்பட உலகின் சில பகுதிகள் ஏற்க மறுப்பது குறித்து கேட்கப்பட்டதற்கு, மும்பைத் தாக்குதல் பாகிஸ்தானில் திட்டமிடப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களுடன் அதனை தெரிவிக்கும் போது ஏன் அவர்கள் ஏற்கமாட்டார்கள் என பதில் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் எந்த ஒரு விடயத்தையும் மறைக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. ஆதாரங்களின் மீது நடத்தப்படும் புலனாய்வு மூலம் கிடைக்கும் தகவல்களை கொண்டு இந்தியாவைத் திருப்திப்படுத்துவது மட்டுமின்றி, உலகின் பல்வேறு தரப்பினரின் திருப்திப்படுத்தவே விரும்புகிறோம் என்று வஹீத் ஹசன் தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Fri, 30 Jan 2009 (12:02 IST)
Updated Date: Fri, 30 Jan 2009 (12:02 IST)