சிறிலங்கப் படையினரின் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே. பாலகுமாரன் படுகாயமடைந்துள்ளார்.
உடையார்கட்டுப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை சிறிலங்கப் படையினர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த அவர் தீவிர மருத்துவச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று புதினம் இணையத்தளம் தெரிவிக்கிறது.