Newsworld News International 0901 29 1090129035_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறிலங்காவுக்கு உதவாதே: பாகிஸ்தான் தூதரகம் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

Advertiesment
சிறிலங்கா பாகிஸ்தான் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் பாரீஸ் இலங்கை இனப்படுகொலை
, வியாழன், 29 ஜனவரி 2009 (12:44 IST)
இலங்கையில் தமிழ் மக்கள் தங்கியுள்ள பகுதியில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி இனப்படுகொலையில் ஈடுபடும் சிறிலங்க அரசுக்கு, பாகிஸ்தான் உதவி செய்யக் கூடாது என வலியுறுத்தி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் சிறுவர், முதியவர் என 10 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் தூதரகம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் என புதினம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாரிஸ் நகரில் மிகவும் பிரபலமான எத்துவால் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 5.30 மணியளவில் நிறைவடைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil