பாகிஸ்தானிற்கு உட்பட்ட பகுதிகளில் அல்-கய்டா பயங்கரவாதிகள் இருப்பதாக ஆதாரப்பூர்வமான உளவுத்தகவல் கிடைத்தால், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்த போது, பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதிகளில் அமெரிக்கா தொடர்ந்து ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்படுவது ஒபாமாவின் உத்தரவினால் மேற்கொள்ளப்படுகிறதா அல்லது கடந்த புஷ் ஆட்சிக் காலத்தில் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜோ பிடென், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம், நேரடி விவாதம் ஆகியவற்றின் போது, பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதிகள் அல்-கய்டா பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் தகவல் கிடைத்தால் அப்பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளதை நினைவுபடுத்தினார்.