Newsworld News International 0901 24 1090124092_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

25 இந்தியர்களுடன் கடத்திய கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் விடுவித்தனர்

Advertiesment
சோமாலிய கடற்கொள்ளையர்கள் நைரோபி ஏடன் வளைகுடா எம்டிபிஸ்காக்லியா
, சனி, 24 ஜனவரி 2009 (18:31 IST)
ஏடன் வளைகுடா பகுதியில் 25 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட ஏமன் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலை கடற்கொள்ளையவர்கள் விடுத்துள்ளனர்.

ஏடன் வளைகுடாப் பகுதியில் கடந்தாண்டு நவம்பர் 25ஆம் தேதி சென்று கொண்டிருந்த ஏமன் நாட்டிற்கு சொந்தமான எம்.டி.பிஸ்காக்லியா என்ற கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தினர்.

அப்போது அதில் இருந்த ஒரு ஐயர்லாந்து சிப்பந்தி, 2 இங்கிலாந்து காவலாளிகள் கடலில் குதித்து உயிர் தப்பினர். இதையடுத்து படகில் மீதமிருந்த 25 இந்தியர்கள், 3 வங்கதேசத்தினரை பிணையக் கைதிகளாக கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், அந்தக் கப்பலை கடற்கொள்ளையர்கள் விடுவித்து விட்டதாக கென்யாவைச் சேர்ந்த தூதர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil