Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறிலங்க ராணுவம் எறிகணைத் தாக்குதல்: வன்னியில் 4 பேர் பலி

Advertiesment
சிறிலங்கா எறிகணை வன்னி வவுனியா இலங்கை
, சனி, 24 ஜனவரி 2009 (18:10 IST)
இலங்கையின் வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வன்னியின் விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று காலை 10 மணியளவில் கடுமையான எறிகணைத் தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து இருட்டுமடு பகுதியிலும் தாக்குதல் நடத்தியதாக புதினம் இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.

இத்தாக்குதலில் பலியானவர்கள் விவரம் இதுவரை தெரியவில்லை. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil