அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் முடியும் வரை உயிருடன் இருக்க மாட்டேன் என கியூபாவின் முன்னாள் அதிபரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான ஃபிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காஸ்ட்ரோ எழுதிய கட்டுரை இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் கம்யூனிஸ்ட் கட்சியினர் அல்லது அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையில் எனது தலையீட்டை குறைத்துக் கொள்ளும் விதமாகவே சமீபகாலமாக தனது எழுதுப் பணியைக் குறைத்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே கியூபா தலைவர்கள் எனது எழுத்துக்களையோ, உடல்நிலை பற்றியோ கவலைப்படக் கூடாது. நான் நன்றாகவே இருக்கிறேன். எனது உடல்நிலை பற்றி செய்திகள் வெளியிட்டு மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தக் கூடாது.
தற்போது வரை உலக நிகழ்வுகள் குறித்த செய்திகளை கேட்டறிவதுடன், அமைதியாக தியானம் செய்து வருகிறேன். ஆனால் இதே நிலை அடுத்த 4 ஆண்டுகள் வரை நீட்டிக்காது. எனவே ஒபாமாவின் 4 ஆண்டு பதவிக்காலம் முடியும் வரை உயிருடன் இருக்க மாட்டேன் என்று ஃபிடல் காஸ்ட்ரோ எழுதியுள்ளார்.