Publish Date: Sat, 24 Jan 2009 (11:23 IST)
Updated Date: Sat, 24 Jan 2009 (11:23 IST)
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 5.1 ஆக பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இன்று அதிகாலை 6.06 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், சுமத்ராவில் உள்ள சிபோல்காவுக்கு தென்மேற்கே 265 கி.மீ தொலைவில், 35 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும், பெரியளவில் பொருட் சேதம் ஏற்படவில்லை என்றும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.