Newsworld News International 0901 23 1090123085_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீனாவில் 1,250 ஆபாச இணையதளங்களுக்கு தடை

Advertiesment
சீனா பீஜிங் ஆபாசம் இணையதளம்
, வெள்ளி, 23 ஜனவரி 2009 (17:30 IST)
இணையதளங்களில் ஆபாசத்தை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 1,250 இணையதளங்களுக்கு சீனா தடைவிதித்துள்ளது.

தலைநகர் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த இணையதள விவகாரத்துறை அமைச்சகத்தின் இணை இயக்குனர் லியு, இதுதொடர்பாக 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த 5ஆம் தேதி துவங்கிய ஆபாச இணையதள ஒழிப்புப் பணியில் குறிப்பிடத்தக்க வெற்றியை அதிகாரிகள் ஈட்டியிருந்தாலும், இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளங்களான கூகிள், பைடு, சினா, சோஹு ஆகியவை தங்கள் தளங்களில் ஆபாசமான விடயங்கள் இடம் பெறுவதைத் தவிர்க்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இம்மாதத் துவக்கத்தில் சீன அரசு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil