Newsworld News International 0901 22 1090122098_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒபாமா மிகுந்த சிரத்தையானவர்: பிடல் காஸ்ட்ரோ

Advertiesment
சிரத்தை ஃபிடல் காஸ்ட்ரோ ஹவானா அமெரிக்கா ஒபாமா அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா
, வியாழன், 22 ஜனவரி 2009 (18:20 IST)
அமெரிக்காவின் 44வது அதிபராக ஒபாமா பதவியேற்கும் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்த ஃபிடல் காஸ்ட்ரோ, அவர் (ஒபாமா) மிகவும் சிரத்தையானவர் என புகழ்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றதை பார்த்த பின்னர் தன்னைச் சந்திக்க வந்த அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்ணான்டஸிடம் இதனை ஃபிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

ஹாவானாவில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்த அதிபர் கிறிஸ்டினா, காஸ்ட்ரோவுடன் தாம் ஒரு மணி நேரத்திற்கு மேல் உரையாடியதாகவும், அவர் நல்ல உடல் நலத்துடன் காணப்படுவதாகவும் கூறினார்.

ஒபாமா பதவியேற்ற நிகழ்ச்சியை அவர் (காஸ்ட்ரோ) தொலைக்காட்சியில் பார்த்ததாகவும், ஒபாமா மீது அவருக்கு நல்ல எண்ணம் உள்ளதாகவும் தெரிவித்த கிறிஸ்டினா, ஒபாமா மிகுந்த சிரத்தையுடைவர் என்று தம்மிடம் காஸ்ட்ரோ கூறியதாக குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil