அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் பராக் ஹுசன் ஒபாமா மக்கள் முன் ஆற்றிய உரையில், கிறிஸ்தவர், முஸ்லிம், யூதர், இந்துக்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடுதான் அமெரிக்கா. இவற்றில், எந்த மதமும் ஏற்றத்தாழ்வு உடையதல்ல என்று கூறியிருந்தார்.
இதற்கு அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்து அமெரிக்க அமைப்பின் சார்பில் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்து அமெரிக்க அமைப்பின் மேம்பாட்டு இயக்குனர் ஷீத்தல் ஷா கூறுகையில், ஒபாமாவின் வார்த்தைகள், அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்களின் கருத்துக்கு கூடுதல் மதிப்பு வழங்கப்படும் என்று உணர்த்துவதாக அமைந்துள்ளது என்றார்.
அமெரிக்காவில் வாழும் இந்துக்களின் நலன்களுக்கு குரல் கொடுப்பதற்காக ஒபாமா தலைமையிலான அரசுடன் இணைந்து தமது அமைப்பு செயல்படும் என்றும் ஷீத்தல் ஷா தெரிவித்துள்ளார்.