Publish Date: Tue, 20 Jan 2009 (18:05 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (18:04 IST)
காஸா பகுதியை சீரமைப்பதில் ஹமாஸ் அமைப்பு ஈடுபடாவிட்டால், அப்பணியில் பாலஸ்தீனத்திற்கு இஸ்ரேல் உதவும் என இஸ்ரேல் பிரதமர் எஹுட் ஓல்மர்ட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு வருகை தந்துள்ள இத்தாலிய அயலுறவு அமைச்சர் ப்ரான்கோவிடம் பேசிய பிரதமர் ஓல்மர்ட், காஸா சீரமைப்பு பணியை ஐ.நா., எகிப்து, பாலஸ்தீன அதிகாரிகளுடன் இணைந்து ஏதாவதொரு சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் என இஸ்ரேல் நம்புவதாக கூறினார்.
இப்பணியில் இஸ்ரேல் முழுமையாக ஒத்துழைக்கும் என்று தெரிவித்த ஆல்மெர்ட், காஸா பகுதியின் சீரழிவுக்கும், அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கும் ஹமாஸ் அமைப்பினர்தான் பொறுப்பு என்பதால், காஸா சீரமைப்பு பணியில் அவர்களுக்கு இடமளிக்கக் கூடாது என ஓல்மர்ட் வலியுறுத்தினார்.
Webdunia
Publish Date: Tue, 20 Jan 2009 (18:05 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (18:04 IST)