Publish Date: Tue, 20 Jan 2009 (13:22 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (13:21 IST)
முல்லைத்தீவு கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கக் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகை கடற்புலிகள் தாக்கி மூழ்கடித்தனர்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கக் கடற்படைக் கப்பல்களின் அணிவகுப்பின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் நேற்று இரவு 11.30 மணியளவில் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அதிவேகத் தாக்குதல் படகு (டோறா) ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்ததாக தமிழ்நெட் இணைய தளம் தெரிவிக்கிறது.
சிறிலங்கக் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளை இடைமறித்துக் கடற்புலிகள் தாக்கியதாகவும், அப்போது நடந்த கடும் மோதலில் சூப்பர் டோறா அதிவேகத் தாக்குதல் படகைக் கடற்கரும்புலிகள் மூழ்கடித்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
Webdunia
Publish Date: Tue, 20 Jan 2009 (13:22 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (13:21 IST)