கிளிநொச்சியில் நெத்தலியாற்றில் இருந்து முன்னேறிய சிறிலங்க இராணுவத்தினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 35 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 60 பேர் காயமுற்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் நெத்தலியாற்றுப் பகுதியில் இருந்து எறிகணைகள், பல்குழல் வெடிகணை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களின் உதவியுடன், கடந்த சனிக்கிழமை முதல் சிறிலங்கா இராணுவத்தினர் முன்னேறியதாகவும், அவர்களை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தாக்கியதாகவும், இரண்டு தரப்பினருக்கும் இடையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த மோதலில் 35 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 60 பேர் காயமுற்றுள்ளதாக புதினம் இணைய தளம் கூறுகிறது.
இந்த மோதலில் சிறிலங்க படையினர் போட்டுவிட்டு ஓடிய துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் புதினம் கூறுகிறது.