Publish Date: Mon, 19 Jan 2009 (16:38 IST)
Updated Date: Mon, 19 Jan 2009 (16:25 IST)
காஸாவில் கடந்த 22 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம் அப்பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது. ஹமாஸ் இயக்கத்தினரும் ஒரு வார கால போர் நிறுத்தத்தை தாங்களாகவே அறிவித்துக் கொண்டதால் காஸாவில் மயான அமைதி நிலவி வருகிறது.
பாலஸ்தீனத்திற்கு உட்பட்ட காஸா மீது கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,200ஐத் தாண்டியுள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, நேற்று (ஞாயிறு) போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை இந்திய நேரப்படி 5.30 மணி முதல் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அமல்படுத்தியதுடன், தனது படைகளையும் காஸாவில் இருந்து திரும்பப் பெறத் துவங்கியுள்ளது.
இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பினரும் ஒரு வார காலம் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்ததால் கடந்த 3 வாரங்களாக இடைவிடாமல் போர் நடந்து வந்த காஸாவில் தற்போது அமைதியான சூழல் நிலவி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு பயந்து ஹமாஸில் இருந்து ஓடிய பொதுமக்கள் சிறிது சிறிதாக தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பத் துவங்கியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Webdunia
Publish Date: Mon, 19 Jan 2009 (16:38 IST)
Updated Date: Mon, 19 Jan 2009 (16:25 IST)