Publish Date: Mon, 19 Jan 2009 (13:27 IST)
Updated Date: Mon, 19 Jan 2009 (12:19 IST)
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் இதுவரை மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டில் உள்ள தூதர்களுக்கு இன்று மாலை விளக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜியோ நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் மெஹ்மூத் குரேஷி மும்பை தாக்குதல் புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து விவரிப்பார் என்றும், அப்போது உள்துறை ஆலோசகர் ரெஹ்மான் மாலிக்கும் அவருடன் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் செயல்படும் சில அமைப்புகள் மீது ஐ.நா பாதுகாப்பு சபை தடைவிதித்த பின்னர் அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும், மும்பை தாக்குதல் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு பற்றியும் அப்போது விளக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.