இலங்கையில் சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 33 அப்பாவிகள் படுகாயமடைந்து உள்ளனர்.௦
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புகளின் மீது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணியளவில் சிறிலங்கப் படையினர் சராமாரியாக எறிகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் விடுதலைப் புலிகள் ஆதரவு இணைய தளமான புதினம் தெரிவிக்கிறது.
கொல்லப்பட்டவர்களில் 9 மாதக் கைக்குழந்தையும் 6 சிறுவர்களும் அடங்குவர் என்றும், காயமடைந்தவர்களில் 1 வயதுக் குழந்தையும் ஒன்றரை வயதுக் குழந்தையும் உட்பட 6 சிறுவர்களும் அடங்குவர் என்றும் அச்செய்தி கூறுகிறது.